வண்ணாரப்பேட்டை போராட்டம் விஷமிகள் தூண்டிவிட்டுள்ளனர் - முதல்வர் பழனிசாமி
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ( சிஏஏ )குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளதாக பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளனர்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால் விதிகளை சுட்டிக்காட்டி திமுகவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
அதன்பிறகு முதல்வர் பழனிசாமி கூறியதாவது, வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றுள்ளது. முதுமையின் காரணமாக இறந்தவரை போலீஸ் தடியடி நடத்தியதால் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர். சில விஷ சக்திகளும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது, ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து காவல் வாகங்களைச் சேதப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.