வண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு லியோனி காரணமா? அமைச்சரின் குற்றச்சாட்டால் பரபரப்பு!
வண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு லியோனி காரணமா?
குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் இன்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’வண்ணாரப்பேட்டையில் வெள்ளி இரவு திமுக கூட்டம் ஒன்று நடந்ததாகவும் அதில் அக்கட்சியின் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உரையாற்றிய பிறகு தான் போராட்டம் வெடித்தது என்றும் வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு போராட்டத்தை திமுக தூண்டி விட்டதாக கூறியுள்ளார்
இதற்கு பதிலளித்துள்ள திண்டுக்கல் லியோனி அவர்கள் கூறியபோது ’தன்னுடைய பேச்சால் கலவரம் ஏற்படவில்லை என்றும் ஒருவரின் உரிமைகள் பறிக்கப்படும் போது இயல்பாக மக்கள் கோபப்படுவார்கள் என்றும் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் யாரும் இந்த போராட்டட்தை தூண்டவில்லை என்றும் கூறினார்
பாபர் மசூதி தீர்ப்பை ஏற்றுக் கொண்ட இஸ்லாமியர்களால் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஏற்க முடியவில்லை என்று தான் பேசியதாகவும் இஸ்லாமியர்கள் மார்க்கத்தை விடவும் இந்த மண்ணை அதிகம் நேசிக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாக விளங்குகிறது என்று தான் தான் தெரிவித்ததாகவும் கூறினார்
இஸ்லாமியர்கள் தலித்துகள் பிற்படுத்தப்பட்டோர் என யாராக இருந்தாலும் உரிமை பாதிக்கப்பட்டால் போராட்டத்தான் செய்வார்கள் என்றும் அந்தப் போராட்டங்களுக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். அமைச்சரின் குற்றச்சாட்டும் லியோனியின் விளக்கமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது