வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (19:30 IST)

பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை: மல்லிகார்ஜூனே கார்கே

Mallikarjun Kharge
பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகாஜூனே கார்கே தெரிவித்துள்ளார்.
 
பெங்களூரில் இன்று எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்  மல்லிகாஜூனே கார்கே பேசியபோது ’சமூக நீதி, ஜனநாயகம், அரசியல் அமைப்பு உள்ளிட்டவற்றை பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார். 
 
பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை என்றும் காங்கிரஸ் அதிகாரத்துக்கு வருவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவில்லை என்றும் பாஜகவை வீழ்த்துவது ஒன்றே தங்கள் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
மேலும்  இந்தியா என்று இந்த  கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பெயரை 26 கட்சிகளும் ஏற்றுக் கொண்டன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய்யான வழக்குகள் போடப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran