வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (17:52 IST)

பாஜக மெகா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

nda
ஏற்கனவே பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விசிக, மார்க்சிஸ்ட் கம்யூ.,  உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்தக் கூட்டத்தில் தேசிய ஜன நாயக கூட்டணிக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து 2024 ஆம் ஆண்டு தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு  இந்தியா (Indian National Democratic Inclusive Alliance)  என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா. டெல்லியில் பாஜகவின் பலத்தை நிரூப்பிக்கும் வகையில், கூட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

இன்று இக்கூட்டம் நடைபெறவுள்ள நிலைய்ல், இக்கூட்டத்திற்கு அதிமுக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமமுக, ஐஜேகே, உள்ளிட்ட 38 கட்சிகள் பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில், இபிஎஸ் பிரதமர் மோடிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.