தேசத்தின் குரல் நசுக்கப்படுவதை தடுப்பதற்கான போராட்டம்- ராகுல் காந்தி
பெங்களூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் பேசிய ராகுல் காந்தி, ''இது இந்தியாவின் சிந்தாத்திற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான யுத்தம்'' என்று கூறினார்.
இன்று பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராகுல் காந்தி,
''இந்தப் போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போராட்டம் அல்ல. இது இந்தியாவின் சிந்தாந்தத்தை பாதுகாப்பதற்கும், தேசத்தின் குரல் நசுக்கப்படுவதை தடுப்பதற்கான போராட்டம். இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்திற்கு எதிராகப் போராட முடிந்ததில்லை. இது இந்தியாவின் சிந்தாத்திற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான யுத்தம்''….என்று கூறினார்.