செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

மீண்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி!

மீண்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி!
மீண்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி!
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன் அவ்வப்போது வெளிநாடு சென்று வந்த பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாட்டு பயணத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்பட்டது
 
 இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மே முதல் வாரத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் என்றும் டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த மாநாட்டின் போது நார்வே ஐஸ்லாந்து டென்மார்க் ஸ்வீடன் பின்லாந்து ஆகிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது 
 
மேலும் உக்ரைன் விவகாரம் குறித்தும் வெளிநாடு செல்லும் பிரதமர் அந்த நாட்டின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது