இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை : கார்த்தி சிதம்பரம்
பிரதமர் மோடியும் நிர்மலா சீதாராமனும் அவர்களது பதவியில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே பிரதமரும் நிதி அமைச்சரும் தங்களது பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என்று கூறினார்
டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது என்றும் ஆனால் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெட்ரோல் விலையை குறைக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்