ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:44 IST)

காப்பி அடிக்காம நேர்மையா தேர்வு எழுதணும்! – மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

நாடு முழுவதும் பள்ளிகள் பொதுத்தேர்வு தொடங்கும் சூழலில் பிரதமர் மோடி மாணவர்களிடம் தேர்வு குறித்து நம்பிக்கையூட்டும் விதமாக பேசியுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் தேர்வு குறித்த பயமும் மாணவர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்கும் விதமாக பரீக்‌ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசி வருகிறார்.

அப்போது பேசிய அவர் “மாணவ, மாணவிகள் தேர்வு குறித்து பயப்பட வேண்டாம். நண்பர்களை காப்பி அடிக்காமல் நேர்மையாக எழுதுங்கள். நீங்கள் அனைவரும் பண்டிகை கொண்டாடுவது போன்ற மனநிலையுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய கனவுகளை தங்களது குழந்தைகள் மீது திணிக்க கூடாது” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.