1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 பிப்ரவரி 2026 (21:26 IST)

தவெகவில் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இதுவா?!.. கசிந்த லிஸ்ட்!..

tvk vijay
தமிழக அரசியல் இதுவரை அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளுக்கும் இடையேயான போட்டியைத்தான் பார்த்திருக்கிறது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் விஜய் ஒரு நட்சத்திர நடிகராக இருந்தவர். 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து தமிழகத்தில் உள்ள மக்களிடம் பிரபலமானவர்..

ஒரு வீட்டில் ஒரு ஓட்டு என்றாலும் தனக்கு ஒன்றரை கோடிக்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என தவெக தலைவர் விஜய் நம்பிக்கொண்டிருக்கிறார்.அதேநேரம் தேர்தலில் வெற்றி பெற நம்பிக்கை மட்டும் போதாது.. சரியான தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிட வேண்டும். அந்த வகையில் தவெக சார்பில் முக்கிய தலைவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றி ஒரு பட்டியல் வெளியே கசிந்திருக்கிறது..

விஜய் விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடலூர் தொகுதியிலும், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா திருவள்ளூர் மற்றும் கள்ளக்குறிச்சி என இரண்டு தொகுதிகளிலும், சி.டி.ஆர்.நிர்மல்குமார் பெரம்பூர் மற்றும் உசிலம்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், ஜே.சி.டி பிரபாகர் வில்லிவாக்கம் தொகுதியிலும், அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியிலும், ராஜ்மோகன் பெரம்பலூர் தொகுதிகளும் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது..