புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (08:11 IST)

செய்தியாளர்களை சந்திக்கின்றார் ரிசர்வ் வங்கி கவர்னர்: முக்கிய அறிவிப்புகள் வெளிவருமா?

செய்தியாளர்களை சந்திக்கின்றார் ரிசர்வ் வங்கி கவர்னர்:
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நான்காம் கட்ட ஊரடங்கிற்கு முன் பிரதமர் மோடி அவர்கள் ரூ.20 லட்சம் குறித்த திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டங்கள் குறித்து விரிவாக சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். 
 
இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அவர் ஒருசில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 25ம் தேதி அமல்செய்யப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலைய்ல் நாட்டில் ரிசர்வ் வங்கி மூன்று மாதம் கடன் இஎம்ஐகளை ஒத்திவைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. இந்த காலக்கெடு இம்மாதத்துடன் முடிவடைவதால் இந்த காலக்கெடு மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இ.எம்.ஐ ஒத்தி வைப்பு மட்டுமின்றி மேலும் சில அதிரடி திட்டங்களும் இன்று அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுவதால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கானோர் அவருடைய செய்தியாளர்கள் சந்திப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.