வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 மே 2020 (16:11 IST)

இந்த எண்ணை நினைவில் வைத்துக் கொள்ளுங்க… 20 லட்சம் கோடி உண்மையில்லை! ப சிதம்பரம் விமர்சனம்!

நிதியமைச்சரும் பிரதமரும் அறிவித்த நிதித்தொகுப்பின் மதிப்பு 20 லட்சம் கோடி இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் கூறிய  ரூ.20 லட்சம்  கோடி  திட்ட  அறிவிப்புகள் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் படி பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமக்கப்படும் என அறிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் மக்களுக்கு அதிக பலன் இல்லை என்றும் அதன் உண்மை மதிப்பு 20 லட்சம் கோடி இல்லை என்றும் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் ‘பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான். ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்’ எனக் கூறியுள்ளார்.