செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (21:30 IST)

நிர்மலா சீதாராமன் இன்றைய அறிவிப்புகள் குறித்து பிரதமர் மோடி டுவீட்

கடந்த 13 ஆம் தேதி  பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும்போது  ரூ. 20 லட்சம் கோடி அளவிலான திட்டங்களை தெரிவித்தார். 
 
இதையடுத்து, கடந்த 14 ஆம் தேதி  மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதா ராமன், முக்கியமான திட்டங்களை அறிவித்தார். இதற்குப் பல பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் இன்று இரண்டாவது முறையாக நேற்று அவர் சில முக்கிய
 
திட்டங்களை அவர் அறிவித்தார். 
 
இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி ரூபாயிலான் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் சீதா ராமன் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.
 
இதுகுறித்து , பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ள   அறிவிப்புகள் கிராமப்புறங்களில்ன்  பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். வேளாண்மை உள்கட்டமைப்புக்கான  சீர்திருத்த நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். நம் நாட்டிலுள்ள  விவசாயிகளின் வருமானத்தை இது அதிகரிக்கச் செய்யும்  என தெரிவித்துள்ளார்.