திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (12:27 IST)

மோடி செஞ்ச காரியத்தை பார்த்து வியந்த நாடுகள்! – ஐ.நா பாராட்டு!

இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி அறிவித்துள்ளதற்கு ஐ.நா சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கி பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கான திட்டங்கள், சலுகைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கி வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த செயல்பாட்டை ஐ.நா சபையின் பொருளாதார கண்காணிப்பு அமைப்பு பாராட்டியுள்ளது. ”இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை மேம்பாட்டுக்காக ஒதுக்கியிருப்பது வளரும் நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்படாத மிகப்பெரிய நடவடிக்கை. பெரும்பாலான வளரும் நாடுகள் ஒரு சதவீதம் வரையிலான நிதி தொகுப்புகளை வழங்கவே யோசித்து வரும் நிலையில், இந்தியாவின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது” என அந்த அமைப்பு பாராட்டியுள்ளது.