வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூன் 2024 (11:49 IST)

மத்திய அமைச்சர்கள் யார் யார்? பிரதமர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டவர்களின் பட்டியல்..!

Modi
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவி ஏற்க இருக்கும் நிலையில் அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் இன்று அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் எம்பி களுக்கு தேநீர் விருந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய விருந்தில் கலந்து கொள்பவர்களில் பலர் மத்திய அமைச்சர்கள் ஆக இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
பிரதமரின் தேநீர் விருந்தில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, சர்பானந்த் சோனோவால், சிவ்ராஜ்சிங் சவுகான், அமித்ஷா, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அண்ணாமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர் பிரதமர் இல்லத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலன் சிங், பிரதாப் ராவ் ஜாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, பெம்மாசானி சந்திரசேகர், எல்ஜேபி கட்சியின் சிராக் பஸ்வான், ஆர்ஜேடியின் ஜெயந்த் சவுத்ரி, ஏஜேஎஸ்யூ கட்சியின் சந்திரசேகர் சவுத்ரி, உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva