1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூன் 2024 (11:17 IST)

3வது முறை மோடி பிரதமராவது சாதனை.. வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியம்: ரஜினிகாந்த்

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக இருப்பது சாதனை என்றும் அதே நேரத்தில் எதிர் கட்சிகள் வலுவாக இருப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியம் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
 
மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை இன்று மாலை நரேந்திர மோடி ஏற்க இருக்கும் நிலையில் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவது சாதனை என்றும் அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்தார். 
 
மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும் இது நல்ல ஜனநாயகத்திற்கான ஆரோக்கியமான அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி சீமானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறிய ரஜினிகாந்த், அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதமர் மோடியின் ஆட்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் கேள்வி ஒன்றுக்கு ரஜினிகாந்த் தெரிவித்தார்.  
 
Edited by Siva