உயிரிழந்த இந்திய மாணவரின் தந்தையுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர்!
உக்ரைன் நாட்டில் கடந்த 6 நாட்களாக ரஷ்ய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உக்ரைன் நாட்டில் படித்து வந்த நிலையில் அவர் இன்று ரஷ்யாவின் ராணுவ தாக்குதலில் உயிரிழந்தார்
இதனை அடுத்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் உக்ரைனில் ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் தந்தை சேகர் கவுடாவுடன் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருடைய தந்தைக்கு ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன