செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (12:07 IST)

தேசிய கொரோனா தடுப்பூசி திருவிழா! – பிரதமர் சொன்ன 4 வலியுறுத்தல்கள்!

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கான தடுப்பூசி திருவிழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முன்னதாக அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதலில் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்த நிலையில் பிறகு 45 வயதிற்கும் அதிகமானோருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதிக்கப்பட்டது.

முன்னதாக மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இன்று டிகா உத்சவ் என்னும் தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மக்களுக்கு நான்கு வலியுறுத்தல்களையும் முன்வைத்துள்ளார். அவையாவன..

தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள். 

 கொரோனா சிகிச்சை பெறுவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

முக கவசம் அணிந்து செல்லுங்கள்.  மற்றவர்களையும் அணியும்படி ஊக்கப்படுத்துங்கள். 

யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டல பகுதியை உருவாக்குங்கள்