செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (11:35 IST)

மூன்று வாரங்களில் மூன்று மடங்கு அதிகரித்த கொரோனா: இந்தியாவில் கோரத்தாண்டமாடும் கொரோனா

இந்தியாவில் மேலும் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என்றும் 839 பேர் உயிரிழப்பு என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் 1,33,58,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,20,81,443 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 169,305 எனவும், குணமானோர் மொத்த எண்ணிக்கை 12,078,333 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் மூன்று மடங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,480 என்று இருந்த நிலையில் இன்று 1,52,879 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
11 ஏப்ரல்: 1,52,879 
10 ஏப்ரல்: 1,45,384
09 ஏப்ரல்: 1,31,968 
08 ஏப்ரல்: 1,26,789 
07 ஏப்ரல்: 1,15,736
06 ஏப்ரல்: 96,982
05 ஏப்ரல்: 1,03,558
04 ஏப்ரல்: 93,249
03 ஏப்ரல்: 89,129
02 ஏப்ரல்: 81,466
01 ஏப்ரல்: 72,330
31 மார்ச் : 53,480