1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (07:56 IST)

1,2,5,10,20 ரூபாய் புதிய நாணயங்கள்: இன்று பிரதமர் வெளியீடு

coins
1,2,5,10,20 ரூபாய் புதிய நாணயங்கள்: இன்று பிரதமர் வெளியீடு
1,2,5,10,20 ஆகிய ரூபாய் நாணயங்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்
 
ஏற்கனவே ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை நாணயங்கள் தற்போது இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன. நாணயங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கூடுதல் நாணயங்களை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பாக 20 ரூபாய் நாணயங்களை வெளியிட வேண்டும் என்றும் அரசு பரிசீலனை செய்து வந்தது
 
இந்த நிலையில்  1,2,5,10,20 ஆகிய ரூபாய் நாணயங்களை பிரதமர் மோடி இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் விதமாக இந்த புதிய நாணயங்கள் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
 
இன்று முதல் புதிய நாணயங்கள் வெளியிடப்படுவதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் பொதுமக்கள் மத்தியில் இந்த நாணயங்கள் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.