ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (14:37 IST)

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

PM Modi
பிரதமர் நரேந்திர மோடி மேடையில் உற்சாக நடனம் ஆடுவது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
பிரதமர் நரேந்திர மோடி மேடையில் உற்சாக நடனம் ஆடுவது போன்று ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவான வீடியோவை ஹைதராபாத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
அந்த வீடியோவை பகிர்வதால் பிரதமர் தம்மை கைது செய்ய மாட்டார் என்று நம்புவதாக அவர் கூறியிருந்தார்.  இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையை பெற்றிருந்தது.


அந்த வீடியோவை பார்த்து மகிழ்ந்த பிரதமர், உச்சக்கட்ட பரப்புரைக் காலத்தில், இதுபோன்ற படைப்பாற்றல்கள் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாகவும், பார்த்து மகிழ்ந்த அனைவரையும் போல தாமும் வீடியோவை பார்த்து மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.