வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 8 மே 2024 (14:12 IST)

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருக்கிறார்கள்...! சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு..!!

Sam Pitroda
இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா  தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, அண்மையில் இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சையை கிளப்பினார். அது பெரும் விவாதப் பொருளானது. இந்த நிலையில், இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என அவர் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
 
இந்தியாவைப் போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டை நாம் ஒன்றிணைக்க முடியும் -- கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைப் போலவும் இருப்பார்கள் என்றும் அது ஒரு பொருட்டல்ல, நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்றும் சாம் பிட்ரோடா தெரிவித்தார்.

 
உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இந்தியாவின் நிலையை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பேசியபோது, அவ்வப்போது மோதல்கள் இருந்தபோதிலும், 75 ஆண்டுகளாக இணக்கமாக வாழும் அதன் மக்களின் திறனை எடுத்துக்காட்டினார். ஆனாலும், இன ரீதியாக அவர் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.