செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (12:07 IST)

ஷின்சோ அபே மீது தாக்குதல் - மோடி வருத்தம்!

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
நிகழ்ச்சியில் ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை பின்புறத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டதாகவும், இதனால் அவர் காயமடைந்ததாகவும் என்.ஹெச்.கே ஊடகம் தெரிவிக்கிறது. சுட்ட நபரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் ஜப்பானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நண்பரான ஷின்சோ அபே தாக்கப்பட்டது மனவருத்தம் அளிக்கிறது. ஷின்சோ அபே விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.