1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Telangana CM welcome yashwanth Sinha but not modi

மோடியை கண்டுக்கல.. யஷ்வந்த் சின்ஹாவுக்கு நேரில் மரியாதை! – சந்திரசேகர் ராவால் பாஜக அதிர்ச்சி!

Telangana
இன்று தெலுங்கானா செல்லும் பிரதமர் மோடியை வரவேற்காத முதல்வர் சந்திரசேகர் ராவ் குடியரசு தலைவர் வேட்பாளரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

தெலுங்கானா மாநில முதல்வராக இருந்து வருபவர் சந்திரசேகர் ராவ். இன்று பிரதமர் மோடி தெலுங்கானா வர உள்ள நிலையில் அவரை வரவேற்க ஒரு அமைச்சர் மட்டுமே செல்ல உள்ளதாகவும் சந்திரசேகர் ராவ் நேரில் செல்ல மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக இரண்டு முறை பிரதமர் மோடி தெலுங்கானா வந்தபோது அவரை வரவேற்க சந்திரசேகர் ராவ் செல்லவில்லை.

இந்நிலையில் இன்று எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெலுங்கானா சென்றார். அங்கு அவரை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் மரியாதை செலுத்தியுள்ளார். இது தெலுங்கானா பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்!