வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (10:20 IST)

வாக்களிக்கும்போது ‘பஜ்ரங்பலி கி ஜெய்’ என கோஷமிடுங்கள்: கர்நாடக மக்களுக்கு மோடி கோரிக்கை..!

PM Modi
வாக்களிக்கும் போது பஜ்ரங்பலி கி ஜெய்’  என கோஷம் இடுங்கள் என கர்நாடக மாநில மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஐந்து நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு இறுதி கட்ட பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தபோது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வாக்களிக்கும் போது மறக்காமல் பஜ்ரங்பலி கி ஜெய்’ என்று கோஷம் விடுங்கள் என்று தெரிவித்துள்ளார். 
 
பஜ்ரங்கல் அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகள் தெரிவித்த நிலையில் அந்த அமைப்பின் கோஷத்தை ஆதரித்து பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran