வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 4 மே 2023 (14:43 IST)

எனது மாநிலம் பற்றி எரிகிறது; தயவு கூர்ந்து உதவுங்கள்: பிரதமர் மோடிக்கு அவசர கோரிக்கை வைத்த மேரிகோம்..!

எனது மாநிலம் மணிப்பூர் பற்றி தெரிகிறது தயவுசெய்து உதவி செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை முதல் இரு பிரிவினர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இன மோதல் தொடர்ந்து வருவதாகவும் தமிழர்களின் 25 வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள் என பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 
மணிப்பூரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பட்டியல் இனத்தில் சேர்ப்பது தொடர்பாக கோரிக்கை விடப்பட்டு அந்த கோரிக்கை போராட்டமாக மாறி தற்போது வன்முறை வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva