வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (19:36 IST)

கொரோனா நிலவரம்: அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்கிறார்
 
கொரோனா நிலவரம் தொடர்பாக திமுக, அதிமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் காரணமாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் காங்கிரஸ் கட்சி மட்டும் புறக்கணித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி செய்து வருவதாகவும் இதன் பின்னர் ஒரு சில அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது