1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (08:49 IST)

200 ஐ தாண்டிய ஒமிக்ரான் பாதிப்பு; அதிர்ச்சியில் இந்தியா! – பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக வேகமாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில் தற்போது உலகை அச்சுறுத்த தொடங்கியுள்ள ஒமிக்ரானின் பாதிப்புகள் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 2 வாரங்களில் 200ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு மற்றும் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து இன்று பிரதமர் மோடி சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதை தொடர்ந்து ஒமிக்ரான் கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகளுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.