செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (07:24 IST)

நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: தெலுங்கானா அரசு அதிர்ச்சி!

நேற்று ஒரே நாளில் தெலங்கானா மாநிலத்தில் 14 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது 200க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிகபட்சமாக டெல்லியில் ஐம்பத்தி ஏழு பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 14 பேர்களும் வெளிநாட்டிலிருந்து தெலுங்கானா மாநிலத்துக்கு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேரம் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.