1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Night lockdown in Tamil Nadu due to Omicron?

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கா?

இரவு நேர ஊரடங்கு
நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்தியா முழுவதும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாகவும், உலகம் முழுவதும் 90 நாடுகளில் பரவி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் ஒரு சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலொன்று தமிழகமும் ஒன்றாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் விரைவில் அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: தெலுங்கானா அரசு அதிர்ச்சி!