மகாராஷ்டிரா மக்கள் ஒவ்வொருவரிடமும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி
மகாராஷ்டிரா மாநில மக்கள் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்த விவகாரத்தில் சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டதை போல் மகாராஷ்டிரா மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிவாஜியிடம் மட்டும் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அனைத்து ஒப்பந்தங்களும் அதானி, அம்பானியிடம் மட்டுமே கொடுக்கப்படுகிறது என்றும் இந்த ஆட்சி இரண்டு பேருக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் இதற்கு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவில்லை, பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு மோடி மன்னிப்பு கேட்கவில்லை, வடகிழக்கு மாநிலத்தில் பாஜகவே தீயிட்டு கொளுத்தி உள்நாட்டு போர் சூழலை ஏற்படுத்தியதற்கு மோடி மன்னிப்பு கேட்கவில்லை. சிறு குரு தொழில்கள் இரண்டு பேரும் நலனுக்காக முடிக்கப்பட்டன அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை, தற்போது சிவாஜி சிலை சேதம் அடைந்ததற்கும் மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என ராகுல் காந்தி சரமாரியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva