தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்து.. அமைச்சர் ஷோபா மன்னிப்பு ஏற்பு.. அரசு தலைமை வழக்கறிஞர்
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதை அடுத்த அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரியதை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அரசு ஏற்றுக்கொள்கிறது என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் ஒருவர் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்துவிட்டு சென்றார் என று மத்திய இணை அமைச்சர் சோபா கரந்தலஜே இந்த வழக்கு குறித்து பேசியது சர்ச்சையானது.
குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாத நிலையில் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஓட்டலில் குண்டு வைத்ததாக ஷோபா கரந்தலஜே பேசியதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தான் தற்போது அமைச்சர் சோபா மன்னிப்பு கேட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது.
Edited by Siva