1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (17:42 IST)

ராகுல் காந்தி சவாலை ஏற்கிறோம்: பிரதமர் மோடி முழக்கம்..!

Modi
நாங்கள் மோடி என்ற தனிமனிதரையோ அல்லது பாரதிய ஜனதா கட்சியையோ எதிர்த்து போராடவில்லை என்றும் சக்தியை எதிர்த்து போராடுகிறோம் என்றும் ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரதமர் மோடி நாங்கள் சக்தியை வணங்குகிறோம் அவர்கள் சக்தியை அழிக்க சபதம் ஏற்கிறார்கள், அந்த சபதத்தை நான் ஏற்கிறேன் என்று தெரிவித்தார்.
 
இன்று தெலுங்கானாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவம் என்றும் ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு மகளும் சக்தியின் வடிவம் என்றும் நாங்கள் அந்த சக்தியின் வடிவத்தை வணங்குகிறோம் என்றும் இந்த பாரத தேசமே சக்தியை வணங்குகிறது என்றும் ஆனால் எதிர்கட்சிகள் சக்தியை அழிக்க துடிக்கின்றன என்று பேசினார் 
 
முன்னதாக இந்திய ஒற்றுமை நீதி நடை பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமை வகிக்கும் கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் தீய சக்தியை எதிர்த்து தான் போராடுகிறோம் என்றும் இந்த சக்தி வாக்குப்பதிவு இயந்திரம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ,சிபிஐ போன்ற அம்சங்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
Edited by Mahendran