திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2024 (17:25 IST)

மோடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்.. காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவியவர் டங்க் ஸ்லிப்..!

congress
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஒருவர் கூட்டம் ஒன்றில் பேசிய போது மோடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என தவறாக பேசிவிட்டு அதன் பிறகு பக்கத்தில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டிய பிறகு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் என்ற பகுதியில் சமீபத்தில் பாஜக சார்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த துரைக்கண்ணு என்பவர் உரையாற்றிய போது பாஜகவின் சாதனைகள் மற்றும் மோடியின் சாதனைகளை வரிசைப்படுத்தினார்.

அதன்பின்னர் இது போன்ற திட்டங்களை தந்து இருக்கும் மோடிக்கு வரும் தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.  உடனே ஆர்ப்பாட்ட மேடையில் இருந்தவர்கள் கைச்சின்னம் அல்ல தாமரை சின்னம் என்று சொல்ல பிறகு அதன் பிறகு சுதாரித்து தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.

அவரது இந்த பேச்சின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து நெட்டிசன்கள் வழக்கம் போல் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.


Edited by Siva