பெட்ரோல் பங்குகளில் மோடி பேனர் அகற்றம்! – தேர்தல் ஆணையம் உத்தரவு!
5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளில் உள்ள பிரதமர் மோடி பேனர்கள் அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ப்ரதான் மந்த்ரி உஜ்ஜுவாலா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பேனர்கள் பல மாநிலங்களின் பெட்ரோல் பங்குகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பெட்ரோல் பங்குகளில் உள்ள பிரதமர் மோடியின் விளம்பர பேனர்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாடுகளின்படி நடப்பு அரசியல் தலைவர்களின் விளம்பர படங்கள் இருக்க கூடாது என்பதால் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.