வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (15:23 IST)

டீத்தூள் கிலோ 3 லட்சம்.. ஒரு கிளாஸ் டீ ஆயிரம் ரூவா! – அதிரவைத்த கல்கத்தா டீக்கடை!

கல்கத்தாவில் உள்ள டீக்கடை ஒன்றில் ரூ.1000க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்பெஷல் டீ ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் அதிகமான மக்கள் டீ குடிக்கும் பழக்கமுடையவர்களாக உள்ள நிலையில் பல வகையான டீக்களும் பகுதிகள் சார்ந்து பிரபலமாக விற்கப்படுகின்றன, அதிலும் டயட் டீ, க்ரீன் டீ என வழக்கத்தை விட விலை சற்று தூக்கலான சில டீக்களும் உண்டு. இந்நிலையில் கொல்கத்தாவில் சிங்கிள் டீ ரூ.1000க்கு விற்கப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் முகுந்த்பூர் பகுதியில் டீக்கடை வைத்துள்ள பர்தா பதிம் கங்குலி என்பவர் தனது டீக்கடையில் ரூ.12க்கு தொடங்கி ரூ.1000 வரை 100க்கும் அதிகமான வகைகளில் டீக்களை விற்பனை செய்து வருகிறாராம், இதில் அதிகபட்ச விலையான ரூ.1000க்கு விற்பனை செய்யப்படும் டீயின் பெயர் போ-லே டீயாம். சீனாவிலிருந்து இந்த போ-லே டீத்தூள் இறக்குமதியாகும் நிலையில் இந்த டீத்தூளின் விலை கிலோ 3 லட்சம் ரூபாய் என்பதால் சிங்கிள் டீ ரூ.1000க்கு விற்பனையாவதாகவும், உடல் பருமனை குறைக்க இந்த டீ உதவுவதால் பலரும் இதை வாங்கி குடிப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.