பெட்ரோல்-டீசல் விலை உயர்வு; கேரளாவில் 12 மணி நேர பந்த்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 2 மார்ச் 2021 (10:30 IST)
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் கேரளாவில் 12 மணி நேர முழு அடைப்பு நடைபெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை பல இடங்களில் லிட்டருக்கு ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் வ்லையை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் 12 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று தனியார் பேருந்துகள் உள்ளிட்டவையும் கேரளாவில் பந்த்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் போக்குவரத்து சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :