1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (17:05 IST)

இருட்டில் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்கள்

பீகார் மாநிலத்தில் இருட்டுக்குள் நடத்தப்பட்டுள்ளது பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு.

பீகார் மாநிலம் மோதிஹரி என்ற பகுதியில்  நேற்று மாலை  பிளஸ்-2 தேர்வுக்கான பொதுத்தேர்வு நடந்தது. அப்போது, தேர்வு மையத்தில் போதிய வெளிச்சம் இல்லை என்பதால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைப் பயன்படுத்தி பல மாணவர்கள் தேர்வு எழுதினர்.

மேலும், பிற்பகல் 1:45 மணிக்கு நடக்க  வேண்டிய தேர்வு மாலை 4:30 மணிக்கு நடந்தது  குறிப்பிடத்தக்கது.