1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:25 IST)

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நடிகர் சோனுசூட்

ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உடனடியாக  நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.

கடந்த ஆண்டு கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராக்டர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து உதவி செய்யும் நடிகர் சோனு சூட்டை கடவுள் என்று அவரது ரசிகர்களும் மக்களும் வணங்கி வருகின்றனர்.

அவரது சமூக சேவைக்கு ஐநா விருது வழங்கிக் கவுரவித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்நிலையில்,    ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உடனடியாக  நடிகர் சோனு சூட் உதவியுள்ளார். இதனால் அக்குழந்தை உடல் நிலை குணமாகி வருவதாகத் தகவல் வெளியாகிறது. இதற்கான   நடிகர் சோனுசூட்டிற்கும் அவரது குழுவிற்கும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. அனுஷா என்ற பெண் குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக உதவிய சோனுசூட்டிற்கு  நன்றி தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நடிகர் சோனு சூட், குணப்படுத்துவதற்கான  நேரம் எனப் பதிலளித்துள்ளார்.