1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. plastic bucket rate is rs.25999

ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை 25,999 ரூபாயா? அமேசான் விளம்பரத்தால் பரபரப்பு!

plastic bucket
ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை 25,999 ரூபாயா? அமேசான் விளம்பரத்தால் பரபரப்பு!
அமேசான் இணையதளத்தில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் நிலை 25,999 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தற்போது இணைய தளங்கள் மூலம் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து அனைத்து பொருட்களையும் வாங்கும் வழக்கம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது
 
குறிப்பாக அமேசான் ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களில் இருந்து ஏராளமான பொருள்கள் பொதுமக்களால் வாங்கப்படுகிறது
 
இந்த நிலையில் அமேசான் இணையதளத்தில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் விலை 25,999 ரூபாய் என்று பதிவு செய்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
இது குறித்து அனைவரும் கிண்டல் செய்து வரும் நிலையில் அமேசான் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது ரூ.259. 99 என்று பதிவு செய்வதற்கு பதிலாக தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழக அரசின் பண்ணை பசுமை கடையில் ரூ.70க்கு தக்காளி!