புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (16:40 IST)

புதிய வெப் சீரிஸில் பிரியா பவானி சங்கர்… அமேசான் ப்ரைம் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.

ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா இயக்கும் புதிய வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரியா பவானி சங்கர். இந்த வெப் சீரிஸ் பற்றி சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அமேசான் ப்ரைம்.