வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (17:02 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? நாளை அறிவிப்பு என தகவல்..!

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கபடும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த முறை நடந்த இதே போன்ற ஒரு கூட்டத்தில் தான் கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க முடிவு செய்யப்பட்டது என்பதும், அதன்பின் அடுத்த நாளே கேஸ் விலை குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
விரைவில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல் மற்றும் அடுத்தாண்டு மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran