திங்கள், 25 செப்டம்பர் 2023
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (15:08 IST)

8 ஜிபி ரேம்.. கேமிங் ஸ்பீட் ப்ராசஸர்! இந்த விலைக்கா? - Lava Blaze 2 Pro சிறப்பம்சங்கள்!

Lava Blaze 2 Pro
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் பட்ஜெட் கஸ்டமர்களை குறிவைத்து களம் இறங்கியுள்ளது Lava Blaze 2 Pro.ஸ்மார்ட்போன் விற்பனையில் உலக அளவில் ஆண்டுதோறும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது. இதனால் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பலவும் பெரும்பான்மை வாடிக்கையாளர்களை குறிவைத்து வாரம்தோறும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்திய தயாரிப்பான Lava Blaze 2 Pro பட்ஜெட் விலையில் கவனம் ஈர்த்துள்ளது.

Lava Blaze 2 Pro சிறப்பம்சங்கள்:
 
 • 6.5 இன்ச் ஹெச்டி+ ஐபிஎஸ் எல்சிடி ஸ்க்ரீன்
 • யுனிசாக் டி616 எஸ்.ஓ.சி சிப்செட்
 • ஆண்ட்ராய்ட் 12
 • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
 • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
 • 256 ஜிபி விரிவாக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்
 • 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ப்ரைமரி ட்ரிபிள் கேமரா
 • 8 எம்பி முன்பக்க செல்ஃபி கேமரா
 • 5000 mAh பேட்டரி, 18 W பாஸ்ட் சார்ஜர்

இந்த Lava Blaze 2 Pro ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் யுனிசாக் ப்ராசஸர் நல்ல கேமிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும். இது 4ஜி அலைவரிசை வரை சப்போர்ட் செய்யக்கூடியது. இந்த Lava Blaze 2 Pro ஸ்மார்ட்போன் கூல் க்ரீன், தண்டர் ப்ளாக், ஸ்வாக் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K