திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (16:18 IST)

மேயர் வீட்டிற்குள் குப்பையை கொட்டி போராட்டம்.. பொதுமக்கள் செயலால் பரபரப்பு..!

வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பையை எடுக்க முடியாது என ஆந்திர மாநிலத்தில் மேயர் ஒருவர் கூறிய நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரது வீட்டிற்குள் குப்பையை கொட்டி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பை எடுக்க முடியாது என கூறிய மேயரை கண்டித்து அவரின் வீட்டில் உள்ளே குப்பைகளை பொதுமக்கள் வீசி போராட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் மேயரின் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ மாதவி ட்ர்ட்டி பொதுமக்கள் யாரும் வரி செலுத்தாதீர்கள் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரி கட்டாத பொதுமக்களிடம் வரி கேட்க வேண்டுமே தவிர அதற்கு பதிலாக குப்பையை எடுக்க முடியாது என்று கூறியது மேயரின் தகாத செயல் என்றும் அதனை கண்டித்து பொதுமக்கள் குப்பையை அவரது வீட்டில் கொட்டி வருகின்றனர்.

Edited by Siva