ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (11:32 IST)

கோவை திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு.!!

Kovai Mayor
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக  29வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில்  97 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இதைத்தொடர்ந்து கோவையின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வந்தார். 
 
திடீரென தனது மேயர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூலை 3ஆம் தேதி  கல்பனா ஆனந்த குமார் அறிவித்தார். உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விளக்கம் அளித்தார். 
 
இந்நிலையில் கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (06.08.2024) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் சு. முத்துசாமி, கே.என் நேரு ஆகியோர் இன்று கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அரங்கில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.


கூட்டத்திற்குப் பிறகு கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவரை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் கோவை மாநகராட்சியின் 29வது வார்டில் இருந்து  கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.