புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (13:59 IST)

மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா பாசிட்டிவ் !

விஜய் ரூபானிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என வந்துள்ளது. 

 
குஜராத் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபாய் நிஜாம்புரா என்ற பகுதியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததை அடுத்து அருகில் இருந்த காவலர்கள் அவரை தாங்கிப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தனர். 
 
அதன்பின் தயாராக இருந்த மருத்துவர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விஜய் ரூபானிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என வந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.