சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (20:45 IST)

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களால்... ரூ. 1,377 கோடி அபராதம் வசூல்

நாட்டில் உள்ள மிக முக்கியமான துறை ரயில்வே துறைதான். இதில் பல லட்சம் ஊழியர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். இதில் தினமும் பல லட்சம் மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தோரில் எண்ணிக்கை மற்றும் அவர்களிடம் வசூல் செய்யப்பட்ட அபரதம் குறித்து ரயில்வே வாரியத்திடம் தகவல் கேட்டிருந்தார்.
 
அதற்கு ரயில்வே வாரியம் அளித்துள்ள தகவலில், கடந்த 2016 - 17 ஆம் ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் சென்றோரிடம் அபராதமாக  ரூ. 405. 30 கோடியும், 2017 - 18ஆம் ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் சென்றோரிடம் அபராதமாக ரூ. 441. 62 கோடியும் ,  2018 - 19ஆம் ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் சென்றோரிடம் அபராதமாக ரூ.530.6கோடியும் ஆக மூன்றாண்டுகளில் ரூ. 1377 கோடிருபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 
 அதாவது, ரயில்வே பாதுகாப்பு படை சட்டம் பிரிவு 137-ன் கீழ் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோரிடம்  குறைந்த பட்சம் ரூ. 250 ம், அதிகபட்சமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த முடியாதவர்களுக்கு குறைந்த பட்சம் 6 மாத சிறை தண்டனை உண்டு. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.