செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (18:57 IST)

நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகளால் சென்செக்ஸ், நிப்டி உயர்வு...

இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக பரப்பான செய்திகள் வெளியானது. அடுத்து ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி, உணவுத்துறையில் வீழ்ச்ச்சி என அடுத்ததுத்து செய்திகள் வெளியான நிலையில் அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிபுணர்களை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் , கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியான நிலையில் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தை முன்னேற்றத்துடன் நிறைவடைந்ததுள்ளது. இதில் மும்பை பங்குச்சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்சென்ஸ் 792.96 புள்ளிகள் ( 2.16 % அதிகரித்து )நிறைவடைந்து 37, 494 புள்ளிகளுடன் முடிந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 228.50 பெற்று (2. 11 புள்ளிகள் அதிகரித்து ) 11,057 .8 5புள்ளிகளுடன் நிறைவறைந்தது. 
 
எனவே இன்றைய வர்த்தக நாளில் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் சில சரிவையும்,சில நிறுவனங்கள் வளர்ச்சியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.