ரயில்வே துறையின் முடிவில் மாற்றம்??
தென்னக ரயில்வே துறை தகவல் பரிமாற்றத்திற்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் மாற்றம் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
ரயில்வே அதிகாரிகளிடையே தகவல் பரிமாற்றம் புரியாமல் போவதை தடுக்க, தமிழில் பேசக்கூடாது என்றும் ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே பேசவேண்டும் என தென்னக ரயில்வே துறை அறிவித்திருந்தது.
இந்த அறிக்கைக்கு தமிழக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது ரயில்வே துறையினர் அந்த அறிவிப்பில் மாற்றம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தென்னக ரயில்வே துறை தற்போது வெளியிட்ட அறிக்கையில், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் பேச வேண்டும் என்ற முடிவில் மாற்றம் செய்திருப்பதாக கூறியுள்ளது.
மேலும் ரயில்வே அதிகாரிகளுக்குள், பிறருக்கு புரிகிற மொழிகளிலேயே பேசலாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.