ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (09:35 IST)

நாடாளுமன்ற விவகாரம்: இனி உள்ளே நுழைய புதிய விதிமுறைகள்!

parliament
நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் உள்ளே குதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நாடாளுமன்ற நுழைவுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.



நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை கூட்டம் நடந்து வந்த நிலையில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இருவர் அவைக்குள் குதித்து புகை பொருளை வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இனி நாடாளுமன்றத்திற்குள் செல்ல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, முதன்மை பிரதான வாயில் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே செல்ல வேண்டும். ஊடகவியலாளர்கள், பணியாளர்கள் தனி வாயில் வழியே உள்ளே அனுமதிக்கப்படுவர். நான்காவது வாயில் வழியாக இதுவரை அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு அவ்வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் உள்ளது போன்ற அதிநவீன உடல் ஸ்கேனிங் இயந்திரத்தை நாடாளுமன்றத்தில் அமைக்கவும், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதிக்க முடியாத வண்ணம் கண்ணாடி சுவர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K