திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2023 (08:28 IST)

நாடாளுமன்றத்தில் அத்துமீறிய விவகாரம்: பரிந்துரை செய்த பாஜக எம்பி விளக்கம்..!

Parliamentary
நேற்று நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் பகுதியில் இருந்த இரண்டு பேர் திடீரென எம்பிக்கள் இருக்கும் பகுதிக்கு சென்று கலர் புகை குப்பிகளை வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
நாடு முழுவதிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி எம்பிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு?யாகி உள்ளதாக அவர்கள் கூறினர். 
 
அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களுக்கு பரிந்துரை செய்தது பாஜக எம் பி பிரதாப் சின்ஹா என்று கூறப்பட்ட நிலையில் அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சாகர் சர்மா என்பவரின் தந்தை தான் தேர்வு செய்யப்பட்ட மைசூர் தொகுதியில் வசிப்பவர் என்றும் தனது மகனுக்கு நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை காண அனுமதி கூறியதால் அவர்களுக்கு பரிந்துரை பரிந்துரை கடிதம் அளித்ததாகவும் பாஜக எம் பி பிரதாப் சிம்ஹா சபாநாயகர் ஓம் பிரகாஷ் அவர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். 
 
இது தவிர அந்த நபர்களின் செயலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்
 
Edited by Siva